×

திருத்தணியில் கத்திரி வெயில் உக்கிரம் வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்

 

திருத்தணி: திருத்தணியில், கத்திரி வெயிலின் உக்கிரத்தால், வெப்ப அலைக்கு பயந்து பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். இதனால், பரபரப்பாக காணப்படும் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில், மலைகள் நிறைந்த திருத்தணி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக மழையின் அளவு குறைந்ததால், கோடையில் வெப்பம் ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் அதிக பட்சம் வெயில் வாட்டி வதைக்கும் நகரங்களில் திருத்தணி முதல் மூன்று இடங்களில் உள்ளது.

இந்த ஆண்டு கோடை வெயில் தொடங்கி ஏப்ரல் முதல் வாரத்தில் 100 டிகிரி பாரன்ஹூட் தொட்ட நிலையில் தொடர்ந்து வெப்பம் அதிகரித்து, கடந்த சில நாட்களாக 109 டிகிரி வெயில் கொளுத்தி வருகின்றது. இதனால், பகல் நேரங்களில் அனல் காற்று வீசி வருகிறது. இரவில் புழுக்கம் காரணமாக குழந்தைகள், முதியோர், பெண்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் அவதியடைந்து வருகின்றனர். கோடை வெயிலின் உச்சகட்டமாக அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று முன்தினம் தொடங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது.

கலை 10 மணி முதல் மாலை 6 வரை வரை வெப்ப அலை வீசுவதால், பொதுமக்கள் பெரும் அளவில் வீடுகளில் முடங்கியுள்ளனர். சாலைகளில் வெப்ப காற்று வீசுவதால், வாகன ஓட்டிகள் முகம் மூடிக்கொண்டு பாதுகாப்புடன் மிக குறைந்த அளவில் பயணம் மேற்கொண்டனர்.

கத்திரி வெயின் தாக்கத்தால், திருத்தணியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் முருகன் கோயில், பேருந்து நிலையம், மா.பொ.சி சாலை, அரக்கோணம் சாலை, சென்னை பைபாஸ் சாலை உட்பட முக்கிய பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. வெயிலின் உக்கரத்திலிருந்து உடலை தற்காத்துக் கொள்ள, பொதுமக்கள் அதிக அளவில் தண்ணீர் குடித்தும், சோர்வாகாமல் இருக்க பழங்கள், ஜூஸ் அதிக அளவில் எடுத்துக்கொள்ள கொள்ள வேண்டும் என்றும் குறிப்பாக குழந்தைகள், முதியோர் மீது அதிக கவனம் செலுத்தி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறித்தினர்.

The post திருத்தணியில் கத்திரி வெயில் உக்கிரம் வீடுகளில் முடங்கிய பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,Kathri ,Tiruvallur district ,Tiruthani ,
× RELATED திருத்தணியில் கத்திரி வெயில் உக்கிரம் வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்